அதிமுகன்னா நாங்க தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
அதில் இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையிலான இரு அணிகள் சார்பாகவும் கலந்து கொண்டனர். இதில் இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் , ஓபிஎஸ் அணி சார்பாக கோவை செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து ஜெயக்குமார் கூறும்போது கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார். அதிமுகன்னா நாங்கதான் என்ற அவர் கோவை செல்வராஜ் எல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க
என்றார். கூட்டத்தின் போது அதிமுக என்று வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை செல்வராஜ் அருகே இருந்ததால், அதனை ஜெயக்குமார் தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டார்.
அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்
