• Sat. Feb 15th, 2025

மதுரை வண்டியூர் தெப்பகுளத்தில் படகுசவாரி தொடக்கம்!

மதுரை மாரியம்மன் கோவிலில் 26 ஏக்கர் பரப்பளவில் அழகிய கலை வேலைப்பாடுகள் கூடிய மைய மண்டபத்துடன் தெப்பகுளம் அமைந்துள்ளது.
தெப்பக்குளம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கிபி 1644 கட்டப்பட்டது. நான்கு பக்கங்களிலும் படி கட்டுகள், 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கான நீர் வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு நேரடியாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக தண்ணீர் நிரப்பட்டுள்ளது.

தெப்பகுளத்தில் படகு சவாரி செய்தவதற்கு பைபர் படகில் 8 நபர்கள், மோட்டார் விசைப்படகு 18 நபர்கள், செல்லக்கூடிய வகையில் 3 விசைப்படகுகள் பயன்பாட்டில் உள்ளது. இன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக காலை 10 மணி முதல் பொதுமக்கள் உபயோகத்திற்காக கட்டணம் வசூல் முறையில் படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டது. விசைப்படகு தெப்பக்குளத்தில் ஒரு சுற்றுக்கு சுமார் 10 நிமிடம் சுற்றிவர நபர் ஒன்றுக்கு 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

படகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பு கருத்தில் கொண்டு நீச்சல் தெரிந்த வீரர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி நடத்தப்படுகிறது. இது குறித்து நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நீண்ட நாளாக விளையாட்டு மைதானமாக செயல்பட்டது. தற்போது தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பபட்டு மீண்டும் மூன்று படகு சவாரி தொடங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சித் துறை சார்பில் சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி செய்யப்படுகிறது. படகு சவாரி செய்வதற்கு 1 நபர் கட்டணம் ரூ 26 வசூலிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.