ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி s. அமிர்தராஜ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் 38வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் மகாபிரபு தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் துரைராஜ்,மாவட்ட பொது செயலாளர் ஐ.என்.டி.யு.சி ராஜசேகரன், ஜோஷ்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர்கே.டி.பி அருண்பாண்டியன் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் தேவசேனா, அரசு மருத்துவர்கள் மருத்துவர் மோசஸ், மருத்துவர். வெங்கடேஷ் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். இதில் அனைத்து இரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ்,ஜீவ அணுகிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், கோவில்பட்டி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சுடலைமணி, பரமேஷ்வரன், கிருஷ்ணகுமார், முத்துஜான்சன்,காமராஜர் இரத்ததான கழக பொது செயலாளர் வைரவராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.