• Wed. Mar 22nd, 2023

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவேண்டும் என கோஷங்களை எழுப்பிய பா.ஜ.க.வினர்..!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பிரிவில் ஆளுங்கட்சியான திமுக தலைவரின் படங்கள் மட்டுமே உள்ளது. அப்படத்தினை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மத்தியில் ஆளும் பிரதமர் மோடியின் படம் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என பாஜகவினர் மருத்துவமனை நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு குமரி மாவட்ட பாஜக சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தெய்வசிகாமணிக்கு குமரிமாவட்ட பாஜகவினர் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் களுக்கு இனிப்பு வழங்கியும் சால்வை அணிவித்தும் பாஜகவினர் நன்றி தெரிவித்தனர்.


பின்னர் அவர்கள் கொரோனா தடுப்பூசி பிரிவினை சென்று பார்த்தபோது அங்கு மாநில அரசின் ஸ்டாலின் மற்றும் கலைஞர் கருணாநிதியின் புகைப்படங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதைப் பார்த்த பாஜகவினர் இந்த திட்டமானது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம். ஆகவே தமிழக தலைவர்களின் புகைப்படங்களை அகற்றி விட்டு, மத்திய அரசான பிரதமர் மோடியின் படத்தையும் வைக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விசுவல் .இனிப்புகள் வழங்கி கொண்டாட வந்த பாஜகவினர் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கோஷம் போராட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *