சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஒழிப்புத் துறையினர் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

புத்திர கவுண்டம்பாளையம் இளங்கோவன் வீடுகளில் சோதனையைத் தொடர்ந்து, ஆத்தூர் நகர அதிமுக செயலாளர் மோகன் வீடு , அவரது சகோதரி உமா ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் சேலம் புத்தரகாண்டம் பாளையத்தில் இளங்கோவன் அவர்கள் இல்லை. சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். ஆகையால் கட்சி தொண்டர்களும் அதிகாரிகளும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முசிறியில் இயங்கி வரும் இளங்கோவனுக்கு சொந்தமான பாலிடெக்னிக் மற்றும் அக்ரி கல்லூரி மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை வருகின்றனர். மேலும், அவருடைய நெருங்கிய நண்பரான வாழப்பாடியில் நகைக் கடை வைத்திருக்கும் துபாய்காரார் என்கிற குபேந்திரன் என்பவருடைய இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. குபேந்திரன் வீட்டில் இல்லை என்பதால், அவரது மனைவியிடம் அவர் வீட்டு சொத்து பத்திரம் எல்லாத்தையும் வாங்கி சரி பார்த்து வருகின்றனர்.
தற்போது, இளங்கோவன், அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.