• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வேகமாய் நிரம்பும் பவானிசாகர் அணை – வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணை நிரம்பி வருவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 104.70 அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர் 104.70மட்டம் உயர்ந்து. அணைக்கு நீர்வரத்து 6500 கனஅடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 104.60அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 6545 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து 6500 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பவானி ஆற்றில் 6545 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் அனையின் முழு கொள்ளவு வான 105 அடியை எட்டும் நிலையில் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.