• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,

ByKalamegam Viswanathan

Mar 2, 2026

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆலோசனைப்படி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை ஒட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் அன்னதானத்தை வழங்கினார். முள்ளிப்பள்ளம் கிளைக் கழக செயலாளர் கேபிள் ராஜா தலைமை வகித்தார் மாவட்ட மகளிர் அணி சந்தான லட்சுமி ராஜமாணிக்கம், வ உ சி கிளை செயலாளர் ஏசு முன்னிலை வகித்தனர்.

அவைத் தலைவர் இளங்கோவன் ஒன்றிய பிரதிநிதிகள் காமாட்சி, பாஸ்கரன், முருகன் துணைச் செயலாளர் மார்நாடு ஒன்றிய மகளிர் அணி லீலாவதி, பொருளாளர் ஆனந்த், கல்லாங்காடு கிளை கழக செயலாளர் முருகேசன் ,ஒன்றிய அணிகளைச் சேர்ந்த முத்துராமலிங்கம், தெய்வேந்திரன் சுந்தர் , வெற்றி, யாகூப்கான், செந்தில்குமார், வண்டிக்கார ராசு , காளிமுத்து, சுதாபால்ராஜ், ராமர், பரமசிவம் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.