ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மானிய திட்டங்கள் குறித்து வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது.
அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பிரச்சார வாகனம் மூலம் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பயன்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பிரச்சார வாகனம் மூலம் வேளாண் துறையில் செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், திட்டத்தில் பயன்பெற யாரை அணுகவேண்டும்,தேவையான ஆவணங்கள், மானிய சதவீதம் குறித்து ஓலி பெருக்கி மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. வாகன பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் பிரச்சாரத்தின் போது அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள் வாகனத்தில் உடன் சென்று விவசாயிகளை சந்தித்தனர்.
இந்த பிரச்சாரத்தில் ஜே.கே.கே.எம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் மற்றும் குமரகுரு வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.