


டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா முழுவதும் அக்கட்சியினர் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி “இன்று டெல்லி நாளை தமிழகம் ” என கோசமிட்டு வெற்றி பெற்றதை கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


