நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் படம் ஒரு கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது என்றே கூறவேண்டும். விமர்சனங்கள் தாண்டி வசூலில் தாறுமாறாக சாதனை செய்து வருகிறது
இந்நிலையில், தற்போது விஜய்க்கு அதிகம் ரசிகர்கள் உள்ள கேரளாவில் பீஸ்ட் படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பீஸ்ட் வெளியான முதல் நாள் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளதாம்.
பீஸ்ட் படம் முதல் நாளில் கேரளாவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. முதலிடத்தில் மோகன் லால் நடித்த ஒடியன் படம் உள்ளது. இந்த படம் 6.76 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.