

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல! அவ்வாறு, நூறு ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனித்துவத்துடன் பணியாற்றி தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் வழியில் பயணித்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் மதுரகவி குறித்த ஒரு பதிவு!
இவர் பயணத்தின் மைல்கல்லாக கேஜிஎப் சேப்டர் – 1, கேஜிஎப் சேப்டர்-2 வில் தனது முத்திரையை பதித்தார். இவரது உழைப்பு குறித்து, அண்மையில் நடைபெற்ற கேஜிஎப் சேப்டர்-2 பிரஸ்மீட்டில், ராக்கிங் ஸ்டார் யாஷ் புகழ்ந்து பேசியுள்ளார்! மதுரகவி குறித்து, “மதுரகவியை பார்த்தவுடன் எனக்கு பிடித்துப் போனது. அவருக்குள் சரஸ்வதி இருப்பதை நான் பார்த்தேன். சக்ஸஸ் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இங்கு யாருக்கும் தெரியாது, ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வரிக்கும் அவர் உழைத்த உழைப்பை நான் அறிவேன்! அவருக்கு என் மகத்தான நன்றி என்று மனமுருகி பேசியுள்ளார்!
கேஜிஎப் சேப்டர்-1& 2 பாடல்களின் வெற்றியை மையமாக வைத்து நேரடி தமிழ் பட வாய்ப்புகள் பாடலாசிரியர் மதுரகவிக்கு வரத் தொடங்கின. லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், மகேந்திரன் நடிக்கும் கரா, சன்னிலியோன் நடிக்கும் OMG. மற்றும் பெயரிடப்படாத பெரிய நடிகர்களின் படங்கள் வரத் தொடங்கியுள்ளன. இவ்வாய்ப்புகள் அனைத்தும் மதுரகவி எழுதிய கேஜிஎப் பாடல்களின் வெற்றியின் காரணமாகவே அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது

யதார்த்தைதை விரும்பும் தற்போதைய தமிழ் ரசிகர்களின் மத்தியில், தரமான பாடல்களுக்கு வெற்றிடம் உருவாகி இருக்கும் இந்த காலகட்டத்தில் தனது பாடல் வரிகளால் மக்கள் மனதோடு பேசி வரும் கவிஞர் மதுரகவியின் திரைப்பயணம் மென்மேலும் சிறக்க அரசியல் டுடே சார்பாக வாழ்த்துகள்.
