வணிக நோக்கத்திற்காக பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருப்பது நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
கால் டாக்ஸி, ஆட்டோ போல் இப்போது பைக் டாக்சியின் புழக்கம் அதிகமாகிவிட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது போக்குவரத்து துறை சார்பாக ஒரு உத்தரவு வந்திருக்கிறது. வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இந்த பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
விதிகள் மீறப்படுவது தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையரிடம் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு கொடுத்திருந்தது. அதனாலேயே இப்படி ஒரு உத்தரவு வெளியாகி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் அவசர காலத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் அளவுக்கு அதிகமாக பணம் கேட்கின்றனர்.
இது சாமானிய மக்களுக்கு கட்டுப்படியாகாது. அதே போல் ஆட்டோவில் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு எப்போதோ வந்துவிட்டது. ஆனால் மீட்டர் பொருத்திய ஆட்டோவை எங்கும் பார்க்க முடியவில்ல.
ஆட்சி மாறினாலும் இந்த ஆட்டோகாரர்கள் மட்டும் மாறவில்லை. பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்றால் கூட 200, 300 என கேட்கின்றனர்.
அதனால் தான் பைக் டாக்ஸியை நாங்கள் விரும்புகிறோம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதையே ப்ளூ சட்டை மாறனும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற மாநிலங்களில் கூட இப்படி இல்லை ஆனால் சென்னையில் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. இதை அரசு சரி செய்யுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.