ஜனவரியில் சென்னை புத்தகக்காட்சி தொடக்கம்..!
சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.ஜனவரி 3ஆம் தேதி முதல், ஜனவரி 21 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற இருக்கிறது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு…
நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!
நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி திரவுபதிமுர்மு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை…
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!
தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி திங்களன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.அதாவது டிசம்பர் 23ஆம் தேதி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை…
அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விதித்த உயர்நீதிமன்றம்..!
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி…
அம்ரீத் திட்டத்தில் சேர டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!
எஸ்.பி.ஐ வங்கியின் நிலையான வைப்பு நிதித் திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு…
செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு 2023ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விளையாட்டு வீரர்களுக்கான…
தென்மாவட்டங்களில் கனமழை : தற்போதைய நிலவரம்..!
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர் கனமழையாலும், அணைக்கட்டுகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையாலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி…
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு…
தற்காலிகமாக ரூ.7,033 கோடி ஒதுக்கக் கோரி.., பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்..!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக ரூ.7,033 கோடி ஒதுக்கக் கோரி, பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப்…
நடிகை கங்கனாரனாவத் பா.ஜ.க. வேட்பாளராகிறாரா..!
சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை கங்கனாரனாவத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.2006 ஆம் ஆண்டில் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். அதற்காக அவர் சிறந்த பெண்…








