• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

Byவிஷா

Dec 20, 2023

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,747க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,976க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,780க்கும், சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,இன்று, வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.