• Wed. Apr 24th, 2024

எம்.எஸ் கிருஷ்ணவேணி

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

சப்பாத்தி மீந்து போய்விட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் (சின்ன (அ) பெரிய வெங்காயம்), பச்சைமிளகாய் – தேவையானஅளவு, துருவிய தேங்காய், தாளிக்க கடுகு, உளுந்தம்பருப்பு,. சப்பாத்தியை மிக சிறுசிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும், அடுப்பு பற்றவைத்து வாணலியை வைத்து தேங்காய் எண்ணெயை…

சமையல் குறிப்புகள்:

அத்திப்பழபால்: தேவையான பொருட்கள்:உலர்ந்த அத்திப் பழம் 2துண்டுகள்,பால்-1டம்ளர்,பொடித்த வெல்லம் (அ)சீனி-2டேபிள் ஸ்பூன் செய்முறை: அத்திபழத்தத் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் ஒன்றரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு, உடன் வெல்லத்தையும் சேர்த்து நைசாக அரைத்து மிச்சம் இருக்கும் பாலையும் சேர்த்து…

சமையல் குறிப்பு:

முறுக்கு மாவு பிசையும் போதே தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றி பிசைந்தால் முறுக்கு ருசியாக இருக்கும்.

சமையல் குறிப்பு:

கோதுமை ரவையுடன் கைப்பிடி அளவு பொட்டுக்கடலை மாவு, வெங்காயம், கேரட், தேவையான அளவு மிளகாய் பொடி (அல்லது) அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்துப் பிசைந்து வடை செய்யலாம். மாலை நேரத்திற்கு ஏற்ற அருமையான, சத்தான சிற்றுண்டி.

சமையல் குறிப்பு:

வாழைப்பூ வடை செய்யும் போது வடை உதிரந்தோ அல்லது உடைந்தோ போகிறதா? வடை மாவுடன் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி மாவைச் சேர்த்து பிசைந்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும், உதிராமலும் வரும்

சமையல் குறிப்பு

பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது உருண்டை கரைந்து போகிறது எனில் இட்லி கொப்பரையில் வைத்து அவித்து குழம்பு கொதிக்கும் போது போட்டுவிட வேண்டும்.

சமையல் குறிப்பு

பருப்புஉருண்டை குழம்பிற்கு உருண்டை செய்ய கடலை பருப்பு, பட்டாணிபருப்பு உடன் ஒரு கைப்பிடி துவரம்பருப்பும் சேர்த்து ஊற வைத்து அரைத்து செய்தால் உருண்டை மிருதுவாக இருக்கும்.

கோதுமை ரவை பாயாசம் செய்யும் முறை..