அத்திப்பழபால்:
தேவையான பொருட்கள்:
உலர்ந்த அத்திப் பழம் 2துண்டுகள்,
பால்-1டம்ளர்,
பொடித்த வெல்லம் (அ)சீனி-2டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அத்திபழத்தத் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் ஒன்றரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு, உடன் வெல்லத்தையும் சேர்த்து நைசாக அரைத்து மிச்சம் இருக்கும் பாலையும் சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும். இந்தப் பால் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.