தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – டெல்லியில் பரபரப்பு!
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு பணிகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை…
இதுதான் என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி- மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பைத் தடுப்பது, இருமொழி கொள்கைத் தொடர்வது இதுதான் என் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.…
தெலங்கானாவில் சுரங்க விபத்து: ஒரு வாரத்திற்குப் பின் 8 பேர் சடலமாக மீட்பு!
தெலங்கானாவில் நடைபெற்ற சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 2 பொறியாளர்கள் உள்பட 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர்…
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்போம்- கனிமொழி ட்வீட்!
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என்று கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வி – கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியுள்ள நிலையில் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி லீக் சுற்றில்…
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து…
சர்ச்சை கலெக்டர் மகாபாரதி அதிரடியாக மாற்றம்- தமிழக அரசு உத்தரவு
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக சர்ச்சை கருத்தை வெளிப்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்றரை…
அதிரடியாக உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை- வணிகர்கள் அதிர்ச்சி
வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம்…
சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்ச மாதிரி கதறுகிறீர்கள்?- சீமான் சர்ச்சை பேட்டி
என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி கதறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னை திருமணம்…
அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மார்ச் 5-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் மார்ச் 5-ம்…












