• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் மாயமான சம்பவம்!!

ByKalamegam Viswanathan

Nov 5, 2025

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சத்தியமூர்த்தி நகர் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக அருகில் இருந்து பார்த்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது இன்று காலை 11 மணியளவில் பவர் ஹவுஸ் அருகில் வைகை ஆற்றில் குளித்தவரை ஆற்று நீர் இழுத்து சென்று விட்டதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சந்தோசின் தந்தை ராஜா சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சந்தோஷை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது