• Sun. Mar 16th, 2025

இதுதான் என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி- மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

ByP.Kavitha Kumar

Mar 1, 2025

மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பைத் தடுப்பது, இருமொழி கொள்கைத் தொடர்வது இதுதான் என் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் மற்றும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.” என்று முழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மேலும், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து மு.க ஸ்டாலின் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநிலத்தில் சுயாசி, இந்தி திணிப்பை தடுப்பது, இருமொழி கொள்கைத் தொடர்வது இதுதான் என் பிறந்த நாள் வாழ்த்து செய்தி” என்றார்.