• Fri. Mar 29th, 2024

ச்ச்சீசீசீ… வாழைப்பழமா… அரண்டு ஓடும் ஆண் சுண்டெலிகள்…

Byகாயத்ரி

Jun 1, 2022

ஆண் சுண்டெலிகளுக்கு வாழைப்பழம் என்றாலே வெறுப்பு ..இருந்தாலும் பெண் எலிக்கு வாழைப்பழத்தின் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. கியூபெக்கின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயத்தை ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

விஞ்ஞானிகள் நடத்திய அய்வு ஒன்றில், வாழைப்பழத்தின் வாசனை ஆண் சுண்டெலிகளுக்கு பிடிக்காது என்பது தெரிய வந்தது. இதற்கான காரணம் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். வாழைப்பழத்தைப் பார்த்தவுடன் எலிகள் ஏன் ஓடுகின்றன என்பதை தான் இதில் பார்க்கபோகிறோம்.ஆண் சுண்டெலிகள் எப்போது கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண் சுண்டெலிகளிடமிருந்து விலகியே இருக்கின்றன. ஏனென்றால், கர்ப்பிணிப் பெண் சுண்டெலிகளின் சிறுநீரில் உள்ள N-Pentyl Acetate என்ற பொருளால் எலிகள் பாதிக்கப்படுகின்றன. கர்ப்பிணி அல்லது பாலூட்டும் சுண்டெலியின் சிறுநீரின் வாசனை ஆண் எலிகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவை இந்த வாசனையால் அசௌகரியமாக உணர்வதால், அதனை விட்டு தூர ஓட முயற்சி செய்கிறது. மே 20-ம் தேதி ‘சயின்ஸ் அட்வான்ஸ்’ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் சுண்டெலிகளின் சிறுநீரின் வாசனை, வாழைப்பழத்திலும் வருவதாகக் கூறுகிறது. வாழைப்பழத்தை எலிகள் வெறுக்க இதுவே காரணம் என கூறப்படுகிறது.ஆய்வில் உள்ளூர் பல்பொருள் அங்காடியிலிருந்து வாங்கி வாழைப்பழ எண்ணெயை பருத்தி உருண்டைகளில் சேர்த்து ஆண் சுண்டெலிகளின் கூண்டுகளில் வைத்து விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொண்டனர். இது ஆண் சுண்டெலிகளின் மன அழுத்தத்தை அதிகரித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.இது தவிர பெண் சுண்டெலிகளும், ஆண் சுண்டெலிகளை தங்கள் குழந்தைகளிடம் இருந்து விலக்கி வைக்க இந்த வாசனையை பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆண் சுண்டெலிகள் தங்கள் குஞ்சுகளைத் தின்றுவிடும் என்று பெண் எலிகளுக்கு அச்சமும் உள்ளது. ஏனென்றால், மற்ற ஆண் சுண்டெலிகள் எலிக்குஞ்சுகளை கொன்று தின்ன முயல்கின்றன. வாழைப்பழத்தின் வாசனையால் கன்னி ஆண் சுண்டெலிகளுக்கு அதிக பிரச்சனைகள் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *