• Fri. Jan 24th, 2025

டெல்லியில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு

Byவிஷா

Dec 11, 2024

டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப் போவதாக அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை போலவே ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தளத்தில், டெல்லி தேர்தலை தனது சொந்த பலத்தில் எதிர்கொள்ள உள்ளதாகவும், காங்கிரஸ் உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரவிந்த்கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பின் மூலம், இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி விட்டதா என கேள்வி எழுந்துள்ளது.