• Tue. Dec 10th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது – விசிக அறிவிப்பு

Byமதி

Nov 10, 2021

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சமூகம், அரசியல். பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு 2007 முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான (2021) வி.சி.க விருதுகள் பெறும் பட்டியலை வெளியிட்டுள்ளது அந்தக் கட்சி. இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் ஒளி’ விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், ‘காமராசர் கதிர்’ விருது நெல்லை கண்ணனுக்கும், ‘அயோத்திதாசர் ஆதவன் விருது’ குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமால், ‘காயிதேமில்லத் பிறை’ விருது அல்ஹாஜ் மு.பஷீர் அகமது, ‘செம்மொழி ஞாயிறு’ விருது செம்மொழி ௧.இராமசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் உறுதி செய்துள்ளார்.