• Wed. Dec 11th, 2024

மதுரையில் ரோபோட் மூலம் மருத்துவ சிகிச்சை

Byமதி

Nov 10, 2021

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவிட் நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நெருக்கமான தொடர்பு தவிர்க்கப்பட அறிவிக்கப்பட்ட நிலையில் 16 டெலடாக் ஹெல்த் விட்டா ரோபோக்களை இந்த மருத்துவமனை வாங்கியது தொலைதூரத்திலிருந்து நோயறிதல் மற்றும் நோயாளிகளின் உடல் சார் அளவுருக்களை கண்காணிப்பதன் மூலம் கோவிட் பரவலை தடுக்க இந்த தொழில்நுட்பம் உதவியது. பிரத்யோகமாக கோவிட் நோயாளிகளுக்கு 250 படுக்கையில் இருந்த போதிலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மீனாட்சி மிஷன் மருத்துவமனை திறனாற்றலை பன்மடங்கு அதிகரிக்க ஆதாரங்களாக இந்த ரோபோக்கள் செயல்பட்டன நவீன மெய்நிகர் தொழில்நுட்ப ரோபோக்களை இந்தியாவில் ஒரு மருத்துவமனை பயன்படுத்தி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் குருசங்கர் இது குறித்து பேசுகையில் நோய் கண்டறிதலுக்கான மருத்துவர்களின் திறனை மேம்படுத்தும், தொலைதூரத்திலிருந்து நோயாளிகளோடு தொடர்பு கொள்வதை ஏதுவாக்குவதே டெலடாக் ஹெல்ப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான எமது குறிக்கோளாக இருந்தது. இச்சாதனங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த நேரத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் மூன்றாவது கண்ணாக செயல்படும். இந்த ரோபோக்களை பயன்படுத்தி கோவிட் தொற்றில் இரண்டாவது அலை காலத்தின் போதும் அதற்கு பிறகும் எமது மருத்துவமனையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

U.S மற்றும் U.K போன்ற பிற நாடுகளில் உள்ள மருத்துவரிடம் கூட தொலை தூரத்தில் இருந்தபடியே ஆலோசனை செய்யலாம் எங்களது மருத்துவமனையில் நோயாளிகளின் அளவுருக்களை கண்காணிக்க USC,Echo,கேத்லேப் மற்றும் பிற நோயறிதல் சாதனங்களிலும் இந்த ரோபோக்களை நாங்கள் ஒருங்கிணைத்து உள்ளோம் எங்களது பிக்ஸர் ஆர்கைவிங் அண்டு கம்யூனிகேஷன் சிஸ்டம் உடனும் இவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு செய்யப்பட்ட நோயறிதல் சோதனைகள் ஸ்கேன்கள் போன்ற அறிக்கைகளையும் மருத்துவர் எடுத்து பரிசிலிக்க முடியும்.

இது மருத்துவர்களை ஆபத்தில் ஆழ்த்தாமல் ppe ஐப் பயன்படுத்தாமல் நோயாளிகளை பராமரிக்க அனுமதிக்கிறது

உலகின் மிக சிறந்த 10 மருத்துமனைகளில் ஆறு மருத்துவமனைகளில் இந்த ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.