• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

மாரடைப்பால் ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார்.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

OPannerselvam

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

OPannerselvam

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். விஜயலட்சுமி, கடந்த ஒரு வாரமாக வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 63 வயதான ஓ.பி.எஸ். மனைவியின் திடீர் மறைவு அதிமுக தொண்டர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.