பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மார்கழி மாதங்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாலாற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கரையோரம் நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர் தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்து உள்ளதால் அறுபத்தி இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.