பாலிதீன்,பிளாஸ்ட்க் கவர் சோதனையில் கடைகளுக்கு அபராதம் விதித்து செயல்அலுவலர் நடவடிக்கை.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் பாலிதீன் பிளாஸ்டிக் கவர் சோதனை ஈடுபட்டு இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது பின்பு பாலித்தீன் கவர்களின் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது பேரூராட்சி பணியாளர்களும் உடன் இருந்தனர்