தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்திவரும் காட்டுயானை விரைந்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா டிரான்ஸ்பார்மர் டேண்டி No:3 ரேஞ்ச் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானை காளிமுத்து என்பவரின் வீட்டை இடித்து சேதப்படுத்தியுள்ளது.சத்தம் கேட்டு வீட்டினுள்
உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று உயிர் பிழைத்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவாலா வாழவயல்பகுதியில் பாப்பாத்தி என்பவரை தாக்கிக்கொன்றஅரிசி ராஜா என்ற யானை தான் மீண்டும் இப்பகுதியில் நுழைதுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இது போன்று அன்றாடம் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன் பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆட்கொல்லி PM.2 மக்னா யானையை விரைந்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.