• Fri. Mar 29th, 2024

மதுரையில் கல்விக்கடன் வழங்குவதில் சாதனை!

Byகுமார்

Jan 19, 2022

மதுரை மாவட்டத்தில்,கல்விக்கடன் 100 கோடி ரூபாய் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது.

அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரானா காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி சார்ந்த பிரச்சனைகளும், மாணவர்கள் இன்னல்களும் அதிகம்.கொரானா காலகட்டத்தில் கல்விக்கடன் வழங்குவது 54 சதவீதமாக குறைந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மிக முக்கிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் 100 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியுள்ளோம். இது தேசிய அளவில் மிக முக்கிய சாதனை ஆகும்.

மதுரை மாவட்டத்தில் 357 பள்ளிகளில் கல்விக்கடனுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
இதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் 3முறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. எத்தனை பேருக்கு ககல்விக்கடன் கொடுப்பது என்பது முக்கியமல்ல, எத்தனை பேருக்கு கல்விக்கடன் மறுக்கப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு செயல்பட்டோம். யாருக்கும் கல்விக்கடன் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து மேளா நடத்தினோம்.

மதுரை வங்கி கடன் வழங்கும் முகாமில் 11.81கோடி ரூபாய் வழங்கினோம்.

டிசம்பர் 31ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 1095 மாணவர்களுக்கு 99.21கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இதில், கனரா வங்கி அதிகமாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கல்விக்கடனுக்காக தனிப்பிரிவு உருவாக்கி செயல்பட்டோம். இதில் மேலும், 319 விண்ணப்ங்கள் நிலுவையில் உள்ளன.

கல்விக்கடன் வழங்க இந்தாண்டு 150 கோடி என்ற இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த 100 விண்ணப்ங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 40-50கோடி மட்டுமே கடனாக கொடுத்தாம். மாணவர்கள் கல்விக்கடனுக்கு வித்யாலெட்சுமி இணையம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் அந்த இணையம் யார் கையில் உள்ளது என தெரியவில்லை.

வித்யா லெட்சுமி இணையத்திற்கு மாவட்ட அதிகாரிகளுக்கு கடவுச்சொல் தரப்பட வேண்டும். வங்கிகள் கல்விக்கடன் கொடுத்ததும் வட்டியை வரவு வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இதை என் பணியாகவே கருதுகிறேன்.

5000 பேரை இலக்கு வைத்து கடன் கொடுக்க நினைத்தோம். 1000பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட 100 விண்ணப்பங்களை மறுபரீசிலனை செய்வோம்.

கல்விக்கடன் கொடுத்தால் திரும்ப வராது என்ற மனநிலையில் தான் வங்கி அதிகாரிகள் உள்ளனர். வங்கிகளின் இத்தகைய போக்கை மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் கேட்க வேண்டும்.

மதுரையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற மாவட்டங்களில் கல்விக்கடன் வழங்குவதை செயல்படுத்த வேண்டும்.
கல்விக்கடன் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு வங்கிகள் இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்கால விஷயத்தில் ஒன்றிய அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும், என்றார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *