• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா..,

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீராமஅழகர் தசாவதார கொட்டகையில் மச்சம், கூர்மம், வராகம் அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;. கருட சேவை அலங்காரத்தில் ஸ்ரீராமஅழகரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த 99 வருடங்களாக ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான கமிட்டி சார்பாக சித்திரை திருவிழா கொண்டாடி வருகின்றனர். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் திருப்பணிகள் நலச் சங்கம் சார்பாக சித்திரை திருவிழாவை கடந்த 14 வருடங்களாக கொண்டாடி வருகின்றனர். 1-ம்; தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் இருந்து சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுவாமியின் நகர்வலம் முடிந்த பின்பு தசாவதாரக் கொட்டகையில் தங்கும் -ஸ்ரீராமஅழகர் விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். திங்கள் கிழமை இரவு ஸ்ரீராமஅழகர் மச்சவதாரம், கூர்ம அவதாரம், வராஹ அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் செவ்வாய் கிழமை ஸ்ரீராமஅழகருக்கு கருட சேவை அலங்காரம் செய்திருந்தனர். கருட சேவை அலங்காரத்தில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கீழக்கோட்டை பகுதி சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான கமிட்டி பரம்பரை மேனேஜர் கே.ராஜேஸ், தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி எஸ்.வி.எஸ். சண்முகம், செயலாளர் சுப்பையா, பொருளாளர் சோலை. முருகன், இணைத்தலைவர்கள் ஒ.பால்ராஜ், கே.கனகராஜ், எம்.ஜெயராஜ், உதவித் தலைவர்கள் வி.பாண்டியராஜன், பி.பொம்மையன், இணை செயலாளர்கள் ஆர்.சிவானந்தம், டி.செல்வராஜ், பி.ஜி.மாரியப்பன், உதவி செயலாளர்கள் ஏ.மோகன்ராஜ், ஜலந்தர்முருகன், சி.தேவா, தலைமையிலான விழா கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.