ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் விற்பனைக்கு வரவுள்ளது.
குடிநீர் பாட்டில்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக ஆவின் நிறவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் நாசர் கூறும் போது .. ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 28 ஆவின் பால் தயாரிக்கும் யூனிட்களிலும்குடிநீர் தயாரிப்பு தொடங்கப்படும் என்றும் ,இதன் மூலம் அரை லிட்டர் மற்றும் 1 லிட்டர்களில் குடிநீர் விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கான விலை தொடர்பாக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆவின் குடிநீர் விரைவில் விற்பனை..
