சிலியின் அடகாமா (Atacama) பாலைவனத்தில் உள்ள ஒரு செம்புச் சுரங்கம் அருகே டென்னிஸ் அரங்கத்தைவிடப் பெரிய பள்ளம் திடீரென்று ஏற்பட்டுள்ளது.
சுமார் 32 மீட்டர் நீளம்கொண்ட அந்தப் பள்ளம் வார இறுதியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அதைச் சுற்றி சுமார் 100 மீட்டர் பரப்பளவில் பாதுகாப்பு வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தால் ஊழியர்களுக்கோ கருவிகளுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை எனச் சுரங்கத்தின் செயல்பாடுகளை இயக்கும் கனடிய நிறுவனமான Lundin Mining கூறியது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தச் சுரங்கத்தின் ஒருபகுதியில் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.பள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை நிபுணர்கள் நிர்ணயிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.அது சுரங்க வேலையால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது கண்டறியப்படவேண்டும் என்று அந்த வட்டார மேயர் குறிப்பிட்டுள்ளார். சிலி உலகிலேயே ஆக அதிகமான செம்பு உற்பத்தி செய்யும் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.