நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பேபி மலிவு விலை கடையில் விற்பனையாளராக உள்ளார். பேபி தனது வீட்டில் 500க்கும் மேற்பட்ட பூச்செடிகளையும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு ஆர்வத்தோடு இவைகளை வளர்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மாலை நேரத்தில் பூத்து மறுநாள் காலையில் வாடும் தன்மை கொண்ட நிஷா காந்தி மலர், வெண்மை நிறத்தில் மலர்ந்துள்ளது. நிஷாந்தி மலருக்கு இடையில் மஞ்சள் நிறத்தில் மகரந்த துகள்களும் அதிகம் காணப்பட்டது. மகரந்தத்தைச் சுற்றி இரண்டு சிறிய சிறிய வடிவில் பூக்களும் பூத்து இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பேபி வீட்டிற்கு வந்து நிஷா காந்தி மலரை பார்த்து ரசித்தனர். இரவில் பூத்து, காலைக்குள் வாடி விடும் அபூர்வ தன்மை கொண்ட நிஷா காந்தி செடிகள், ஆண்டின் ஒருமுறையே பூக்கும். குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மட்டும் இந்த பூச்செடி குறைந்த அளவில் உள்ளது. `இரவு ராணி’ என அழைக்கப்படும் இது, கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. இவற்றை வீடுகளில் வளர்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மைசூர் பகுதிகளில் நிஷா காந்தி மலர்களை வைத்து சிவனுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. பேபி தனது வீட்டில் மலர்ந்ததை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் நிஷா காந்தி மலரை காண வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மலருக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்பு விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு நிஷா காந்தி மலரை பறித்து மஞ்சூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சிவன் மீது வைத்து பூஜை நடத்தப்பட்டனர்.