• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,

ByKalamegam Viswanathan

May 21, 2026

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 சார்பாக நகர் நல அலுவலர் டாக்டர் அபிஷேக் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பால விஷ்ணு தூய்மை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 283 துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மாநகரை தூய்மை மாநகரமாக மாற்ற ஒத்துழைப்பு தாருங்கள் என கோஷமிட்டும், வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பையாக பிரித்து தாருங்கள் எனக் கூறியும் புரதான மதுரையை பசுமை மதுரையாக மாற்றுவோம் பொதுமக்களே ஒத்துழைப்பு தாருங்கள் என தூய்மை பணியாளர்கள் கோசமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள் .