

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போராட்டம்.
கள்ளுக்கடைகளை திறங்கள் மதுக்கடைகளை மூடுங்கள் என்ற கோசத்துடன் தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு சமுக அமைப்புகளான விவசாய தொழிலாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு தமிழ் சங்கம், மற்றும் பெண்ணீய அமைப்பினர் பங்கேற்று மதுக்கடைகளை மூடி விட்டு, கள்ளுக்கடைகளை திறங்கள் என்ற போராட்ட கோசத்தை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சற்றே நின்று கவனித்து சென்றதை காண முடிந்தது.
போராட்டத்தின் முடிவில் போராட்டகாரர்கள், அந்த பகுதியில் நின்ற பொதுமக்களுடன் இணைந்து குமரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவான, மருத்துவ குணங்கள் கொண்ட மீன் மற்றும் அவித்த மரச்சீனி கிழக்கு, மீன் குழம்பு கலவையான உணவு பரிமாறப்பட்டது ஒரு புதுமையான நிகழ்வாக இருந்தது.
கோவை மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் உள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கள் வேண்டுவோர் என்ற சங்கம் பல காலமாக தமிழக அரசுக்கு கள் இறங்கும் அனுமதியை கேட்டு வரும் நிலையில் கோவையின் கோரிக்கைக்கு, குமரி குரல் கொடுப்பது போல் உள்ளது இவர்களின் போராட்டம்.
