ஆவின்பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் நாசர் குறித்து கிண்டலடித்துள்ளார்.
அரை லிட்டர் பால் பாக்கெட்டில் தினமும் 75 மி.லிட்டரை நாசர் என்ற பூனை குடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் தமிழகம் முழுவதும் நாள் தோறும்37 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.அதன் எடை குறைக்கப்பட்டதன் மூலம் தினமும் 2.40 கோடி ஊழல் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வருடத்திற்கு மொத்தம் ரூ800 கோடி ஊழல் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.