• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வைரமுத்துவை தவிர்த்தது ஏன் ?மணிரத்னம் பதில்

ByA.Tamilselvan

Sep 19, 2022

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் கவிஞர் வைரமுத்துவை தவிர்த்தது ஏன் என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியபொன்னியின் செல்வன் வரும் செப்.30ல்30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது..
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்த நிலையில் படக்குழுவினரின் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கவிஞர் வைரமுத்துவுடன் பணியாற்றாதது ஏன் ? என்ற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம் “வைரமுத்துவுடன் இணைந்து பல படங்கள் பணியாற்றி விட்டோம்,பல புதிய திறமையாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் இந்த முடிவு என்றார்.