6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன்.,
மறைந்த ஐயா மூக்கையாத்தேவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரை வணங்கியுள்ளோம்.,
இந்த நேரத்தில் அரசியலில் தூய்மையான அரசியல்வாதியாக திகழ்ந்த 6 முறை சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கச்சதீவு மீட்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பேசியுள்ளார்.,
அவரது வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை., தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.,
அவருக்காக திமுக அரசு செய்துள்ளது, இப்போது உள்ள அரசு அவரது வாழ்க்கை வரலாறை பாட புத்தகத்தில் சேர்த்தால் இளைஞர்களுக்கு நன்மையாக இருக்கும்.,

செக்காணூரணி பேருந்து நிலையத்திற்கு பி.கே.மூக்கையாத்தேவர் பெயர் சூட்ட வேண்டும்.,
மேகமலை விவகாரம் தொடர்பாக திமுக வழக்கு தொடரலாம் என இருக்கிறோம்., 2006 வன சட்டப்படி எங்களது மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என கேட்கிறோம், அதன் படி கொடுத்தாலே போதும், அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது., அதன் படி நீதியை வழங்கினால் மேகமலை மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது, அதை முன்னிறுத்தி திமுக சார்பில் வழக்கும் தொடுக்க உள்ளோம்., நிச்சயமாக அவர்களை காப்பாற்றுவோம்.,
தொகுதி மறுசீரமைப்புக்கு 7.9 படி எங்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுசீரமைப்பு வேண்டும்.,
தவெக சொன்ன திட்டங்களே மக்களுக்கு சென்றடையவில்லை அதற்குள் நான் பிரதமாக போய்விடுவேன் என சொன்னால் என்ன என தெரியவில்லை என பேட்டியளித்தார்.,








