• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சர்தார் 2 படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி நடிகர் கார்த்திக், SJ சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது:

கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிரெய்லர் வெளியிட்டோம் மகிழ்ச்சியாக உள்ளது.

திருச்செந்தூர் போய் முருகன சாமி தரிசனம் செஞ்சிட்டோம் அப்புறம் திருநெல்வேலி போயி தியேட்டர் விசிட் மக்களை சந்தித்தோம்,

இப்ப மதுரைக்கு மங்கையர்கரசி காலேஜ் வந்தோம் ஸ்டூடன்ஸ் ச சந்திச்சது ரொம்ப சந்தோசம் ரெம்ப ஆரவார வரவேற்பு கொடுத்தாங்க அவங்களுக்கு ரெம்ப நன்றி மதுரை வந்தாலே சந்தோசம் தான் மதுரை மண்ண தொட்டு வணங்கிட்டு எல்லாத்தையும் பார்த்திட்டு போக வந்திருக்கோம்

சர்தார் 2 நல்ல பெரிய படமா வந்திருக்கு SJ சூர்யா கூட இருக்குறதுநால பெரிய பலமா இருக்கு எங்களுக்கு மித்ரன் நீண்ட நாளுக்கு பிறகு அதிக பொருட் செலவுல எடுத்திருக்காரு

முதல் பாகத்தில பிளாஸ்ட்டிக் விழிப்புணர்வு இருப்பது போல் 2 வது பாகத்திலும் ஒரு விசயம் இருக்கு இந்த படத்தில

படம் பாருங்க சுவாரஸ்யமான அர்த்தத்துடன் படம் வந்திருக்கு கண்டிப் பா எல்லாரும் பாருங்க பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கு படத்துல

நடிகர் SJ சூர்யா பேசுகையில்,

மதுரை மக்களுக்கு வணக்கம் நான் நம்ம ஊரு பசங்கதான் நமக்கு நம்ம ஊரு தான்

திருச்செந்தூர் போய் முருகன் அருள் ல பெற்று அப்படியே இங்க வந்திட்டோம் அப்படியே மீனாட்சியம்மன் கிட்ட எடுத்திட்டு போகனும்

மதுரை ல நான் சொல்ல வந்தது என்னவென்றால்

செப் 10 படம் வருது எல்லாரும் பாத்து நல்லா என்ஜாய் பன்னுங்க,

எல்லா இடத்திலயும் மக்கள சந்திக்க முடியலைனு பாக்க முடியலனு feel பன்ன கூடாது
கிடைச்ச நேரத்தில வந்து மீட் பன்றோம் அடுத்து திருச்சி போறோம்

கார்த்தி கோயம்புத்தூர் போறாரு நான் போகல கோயமுத்தூர் மக்கள் கோவிச்சிக்க கூடாது என்ன

இன்னொரு நாள் கண்டிப்பா கோயமுத்தூர் சைடு வருவோம்

நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது

அனைவருக்கும் வணக்கம் செப் 10 படம் வருது இங்க வந்தது ரொம்ப சந்தோசம் காலேஜ் ஸ்டூன் ஸ் வைப் பயங்கரமா இருந்துச்சு ,

ரெம்ப சந்தோசம் உங்கள் அனைவரின் சப்போட் உடன் படம் வெளியாக உள்ளது.

மீண்டும் நடிகர் கார்த்திக் பேசுகையில்

மதுரை மக்களுக்கு எப்போதும் குறையில்லை

புதிய திரைப்படம் உடனடியாக web ல் வந்துவிடுகிறது சினிமாவை பாதிக்கிறது தமிழக முதல்வர் திரைத் துறையில் இருந்து வந்திருக்கிறார் சினிமா துறை தற்போது எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு :

தமிழக முதல்வருக்கு இந்த விசயம் குறித்து புரியும் நிச்சயம் அதற்கான Strong ஆன நடவடிக்கை எடுப்பார்

சினிமாவில் நடிகர், இயக்குநர் மட்டுமில்ல தயாரிப்பாளர்கள் ஊழியர்கள் என பெரிய டீம் உள்ளனர் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்

சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்ல அது வாழ்க்கை பற்றி சொல்லிதரும் ஒரு கலை கலையை பாதுகாக்க வேண்டும்

நான் முதல்வரை பார்க்கும் போது சொன்னேன் அண்ணா மற்றவர்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும் நீங்களே நல்லா பாத்துக்கோங்க என்று சொன்னோம் அவர் பார்த்துக் கொள்வார்.

அரசியலுக்கு நீங்க எப்ப வருவீங்க என்ற கேள்விக்கு :

எதுக்கு இப்ப அது நான் இருக்கிற வேலையை ஒழுங்கா பாப்போம்,

மக்களை சந்தோசப்படுத்துவோம், நல்ல ஹிட் கொடுப்போம் அது தான் எனக்கு ரெம்ப பிடிக்கும்

கார்த்தி என்றால் SJ சூர்யாவுக்கு கோபம் வரும் ல

சர்தார் 2 பாருங்க எல்லாருக்கும் புரியும்

நல்ல விசயத்த பாக்குறோம், கேக்குறோம் ஆனா follow up பன்னமாட்டுறோம் follow up பன்னல னா என்ன தப்பு நடக்கும் என்பத அது இந்த படத்தில important ஆ இருக்கும் நல்ல விசயம் படத்தில இருக்கும் பொறுப்பா சர்தாருக்குரிய கெட்டப்ல கார்த்தி நல்லா நடித்திருக்கிறார் நல்ல படமாக இருக்கும் படத்துல எனக்கும் யோகி பாபுவுக்கும் சீன் இருக்கு என SJ சூர்யா பேசினார்.