• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

ByA.Tamilselvan

Sep 2, 2022

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திர்ப்பு வழங்கவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.இதனையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் ,ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ,அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு 80 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.