புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். (பூம்பூம்மாடு, நரிக்குறவர்கள் வசித்து பகுதி ) 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த மூன்று தலைமுறையாக இவர்களுக்கு கல்வி அறிவு இல்லை ஏன நிலையில், முதன்முறையாக இந்த தலைமுறை மட்டுமே கல்வி அறிவு பெற்று வருகின்றனர்.
இங்கு ஒன்று முதல் கல்லூரி படிப்பு வரை மாணவ மாணவியர் படித்து வரும் நிலையில் நான்கு பேர் முதன்முறையாக செவிலியர் படிப்பு முடித்து தற்பொழுது பல்வேறு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கீரனூரில் இருந்து புதுக்கோட்டை வந்த அரசு நகர பேருந்து எட்டாம் நம்பர், 20 மாணவிகள் பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளனர். ஏற்கனவே பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் நடத்துனர் அவர்களுக்கு கீழே இறங்குமாறு கூறியுள்ளார். திறக்கவே மேலிருந்து குழந்தைகள் சரிந்து கீழே விழுந்து உளளனர் அவர்களுக்கு கை கால் இடுப்பு பகுதியில் அடிபட்டு
ரேட்டு அவர்கள் அந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நடத்துனர் அந்த பிள்ளைகளை தள்ளி விட்டதால் அவர்கள் சரிந்து கீழே விழுந்ததாக மாணவி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆசிரியர் ராஜா என்பவர் நம்மிடம் கூறும் பொழுது பள்ளி நேரத்தில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும். கீரனூரில் இருந்து வருவதால் அதிக கூட்டம் வருகிறது. ஆகவே நிர்வாகம் உடனடியாக பள்ளி நேரத்தில் அதிக பேருந்துகள் இயக்கி இதுபோன்ற அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என தெரிவித்தார் மேலும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அந்த ஓட்டுனர் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் , மீண்டும் மேலும் கீழ்ப்பட்ட சமுதாயம் என்பதால் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் இவர்களை பேருந்தில் ஏற்றவே விருப்பம் இல்லாமல் ஏற்றி செல்கின்றார்கள்.
அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தற்பொழுது அந்த மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று மாலை அல்லது நாளை காலை வீடு திரும்புவார்கள் என மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தன.




