• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியை நடத்தினர்.

        இப்பேரணியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் போதை ஒழிப்பு குறித்த விளம்பர பதாகைகளை கையில் சுமந்தவாறும், போதையினால் விளையும் தீங்குகளை குறித்து கோஷமிட்டவாறும் மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி திருமங்கலம் ராஜாஜிசிலை முன்பு துவங்கி, திருமங்கலம் உழவர் சந்தை வரை நிறைவு பெற்றது