• Thu. Dec 12th, 2024

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

ByA.Tamilselvan

Sep 2, 2022

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்கப்பவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழா கொச்சியில் நடைபெற்றது.
இந்த விமானந்தாங்கி கப்பலில் 2 ஓடுதளங்கள் உள்ளன. இக்கப்பலிலிருந்து MiG-29K போா் விமானங்கள், Kamov-31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் – 60ஆா் ஹெலிகாப்டா்கள் என 30 விமானங்களை இயக்கவும், தரையிறக்கவும் முடியும். சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த போர்க்கப்பல் உருவாகி உள்ளது. 43 ஆயிரம் டன் எடையை தாங்ககூடிய இந்த புதிய போர்க்கப்பல் இந்திய கப்பல் படைக்கும், விமானப்படைக்கும் மேலும் வலு சேரக்கும்.