• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனிநீதிபதி அளித்த உத்தரவு செல்லாது- அதிமுக வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ByA.Tamilselvan

Sep 2, 2022

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேலமுறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.