புதுக்கோட்டை மண்டலத்தை சார்ந்த நகர பேருந்து தடம் எண் 08, பேருந்து எண் TN 55 / N 1191 – என்ற பேருந்து கீரனூரில் காலை சுமார் 08.30 am மணி அளவில் நடை எடுத்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் பொழுது பேருந்தில் 90 பயணிகள் இருந்த நிலையில் சுமார் 09.05 am மணி அளவில் ரெங்கம்மாள் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மேலும், சுமார் 30 பயணிகள்

பயணிகள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றி பேருந்தை நகர்த்தும் பொழுது படிக்கட்டில் மாணவ மாணவிகள் அதிக அளவில் தொங்கியபடி வந்ததால் கீழே விழுந்து ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு பேருந்தின் கதவை மூடி விட்டு பேருந்தை நகர்த்தும் பொழுது பேருந்தின் கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன் படிக்கட்டின் அருகில் உள்ள அவசர கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதால் பேருந்தின் முன் படிக்கட்டு திறந்து படியில் நின்ற மாணவ மாணவிகள் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதில் 10 மாணவ மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதில் 2 பேர் உள்நோயாளிகளாகவும், 08 பேர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெள்ளனூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேற்படி விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பொது மேலாளர் திரு. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.




