விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது சிவகாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவர் மூடைகளுடன் வந்து போது வண்டியை மறித்து சோதனை நடத்தினர். மூடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் இருந்து தெரியவந்தது. உடனடியாக மூடைகளில் இருந்த 85 பாக்கெட்டுகள் கொண்ட இருபது கிலோ புகையிலை மூடைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 27), சூர்யா (வயது 27) என தெரிந்தது .

உடனடியாக மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மாடசாமியை கைது செய்தனர். இந்த நிலையில் சூர்யா தப்பி ஓடினார். தலைமறைவான சூர்யா மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.




