• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அடைப்பால் சாலையில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேக்கம்..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு குடியிருப்புகளின் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்த நிலையில்,

கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ,வாய்க்காலில் இருந்து வெளியேறிய கழிவு நீர் துர்நாற்றத்துடன் சாலைகளில் வெள்ளமென திரண்டு இருப்பதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் செல்வதற்கு வழியின்றி கழிவுநீரில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், நோய் தொற்று பரவும் நிலையில் குழந்தைகள் முதல் முதியவர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், குற்றம் சாற்றுகின்றனர் .

இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக குடியிருப்பு வாசிகள் குறை கூறினர். பெரும் தொற்றுநோய் பரவும் முன் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.