• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மற்றொருமாணவி தற்கொலை … வெடித்தது போராட்டம்

ByA.Tamilselvan

Jul 25, 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள்,உறவினர்கள் ,பொற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் கடந்த 10 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஹாஸ்டலில் பிளஸ்2 மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பள்ளி நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி அம்மாணவியின் உறவினர்கள்,பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவியின் சடலம் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு மாணவியின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.