• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு..,

ByKalamegam Viswanathan

Jul 11, 2026

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லாவண்யா ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார், நிர்வாகிகள் ஜெயக்குமார், சதீஷ்குமார், நிரஞ்சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த கல்வி ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் மதிப்புமிகு எஸ்.அமுதா கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சிக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் மேலாண்மைக் குழுவின் பங்கு என்ன மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் சுற்றுச்சுவர் அமைக்கவும் , கலையரங்கம் கட்டவும் நுழைவு வாயில் பெரியதாக்கி பாதுக்காப்பை பல படுத்துதல் இரவு மற்றும் பகல் நேரம் என இரு வேலையும் காவலர்களை நியமிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை அணுகி கட்டமைபுக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்ற பட்டது மேலும் நிகழ்வில நிர்வாகிகள் காந்தராஜ், மூர்த்தி, குணசேகரன் ,ஆசிரியர்கள் பி.மணிகண்டன், ஜே.வசந்த், கோமளா, ராஜேஸ்வரி B , கோகுல், சங்கரலிங்கம், சுரேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் முன்னாள் மாணவ உறுப்பினரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி கூறினார்.

அதேபோன்று திருவூர் அரசு ஆதிதிராவடர் நல ஆரம்பப்பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பொறுப்பு தலைமையாசிரியர் கி.விஜி அனந்தநாயகி தலைமையிலும் மேலாண்மைக் குழு தலைவர் அ.ஆனந்தி அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் ம.பூர்ணிமா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ( கல்வியாளர் ) சா.அருணன் அவர்கள் கலந்துக் கொண்டு பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த என்ன என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைவரும். ஒன்றிணைந்து செயல்பட்டு மாணவர் செர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றார். இக்கூட்டத்திற்கு பெற்றோர்கள் பெருமளவில் கலந்துக் கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியராக நிமிக்கப்பட்டுள்ள ஆசிரியை பா.தீபா நன்றி கூறினார்.