• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சாதிவாரி கணக்கெடுப்பு – மோடி முடிவெடுப்பார்

By

Sep 12, 2021 , , , ,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் சமூக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அடுத்தமுறை அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நிலம் இல்லாத மக்களுக்கு 5 ஏக்கர் வழங்க வேண்டும். அப்போது தான் வறுமையை ஒழிக்க முடியும் என முதலமைச்சருக்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தமிழ் நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தனது நிலைப்பாடு என்ற அவர், இது தொடர்பாக பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.