• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜிம்மி என்றொரு நாய்க்குட்டி

ByA.Tamilselvan

Jun 15, 2022

அது ஒரு
தேசிய நெடுஞ்சாலை
வேகமாக பறக்கும்
வாகனங்களின் டயர்களில்
ஜிம்மியின் உடல்
கொஞ்சம் கொஞ்சமாக
பிய்து எறியப்பட்டு
கொண்டிருந்தது…

ஜிம்மியின் வாலாட்டும்
அழகை காட்டி
குழந்தைக்கு சோறுட்ட
தாய் ஒருவர் காத்திருந்தார்…

எங்க இந்த சனியன காணேம்…
ஜிம்மிக்கு உணவு வைத்த பிறகே
தூங்க போகும்
பெண் ஒருவர் காத்திருந்தார்..

ராத்திரியான தூங்கவிடமாட்டேங்குது
இன்னக்கி வரட்டும்…
கையில் கற்களோடு ஜிம்மிக்காக
காத்திருந்தான் ஒருவன்….

இனம்புரியாத சத்தத்தோடு
தெருக்களை சுற்றிச்சுற்றி
ஜிம்மிக்காக காத்திருந்தது
பெண்நாய் ஒன்று…

உயிர் பிரிகிற
அந்த கணத்தில்
இவர்களில் யாரை
நினைத்திருக்கும்
ஜிம்மி….

அ.தமிழ்ச்செல்வன்